Saturday 16 August 2014

அஞ்சான் : A gang bang Gangster.


Spoiler alert: ( இதில் spoiler என்பது லின்கூ சாமி அல்ல .)




ஒரு ஊர்ல ஒரு கீரோ இருக்குறாரு... அவர் மாற்றுத்திறனாளி. அவரோட அண்ணனை தேடி பாஷா, மார்க் ஆண்டனி, கேஷ்வா ,வேலு நாயக்கர், விஷ்வா பாய் , அவுங்க அப்பா தகடு தகடு சத்தியராஜ் பாய் , நைட்டுல கூட கூலிங் கிளாஸ் போட்டு அலஞ்ச ஜனா ஜி , அப்புறம் இன்னப்பிற " ரவுடிகளின் சரணாலயம் " பாம்பேவுக்கு வரார். அதென்னவோ தெரியால "கழுத கெட்ட குட்டி செவுரு " மாதிரி "ரவுடி கெட்டா பாம்பே " லாஜிக்படி பாம்பேவில் இருக்கும் " சென்னை அமிர்தா இன்ஸ்டிடியுட் ஆப் ரவுடி மெனெஜ்மெண்ட் " ஸ்கூலில் சேர்ந்து படிக்கிறார்கள் wannabe ரவுடிகள்.

அங்கே வந்து பார்த்தால் தான் தெரிகிறது அவர் அண்ணன் தான் "ராஜு பாய் " என்று ஊரே மெரளும் ரவுடி.... தன் அண்ணன் பற்றிய தகவல்களை அவர் தேடத்தொடங்க , சிலபல மர்ம முடிச்சுகள் ( சமந்தா பட்டனும் சேர்ந்து " அவிழும் திரைப்படம் தான் அஞ்சான் : A gangbang Gangster.

கதை : 



ஏற்கனவே baking soda போட்டு அரைக்கப்பட்ட அதே மாவு...அதை மீண்டும் அரைத்திருக்கிறார் அண்ணன் லின்கூ .. பீமா படத்தை அரைத்த அதே சவுபாக்கியா வெட் கிரைண்டர் இதே மாவை அரைத்ததாக கேள்வி. 

பெருசா ஒண்ணுமில்ல.... எம் ஜி ஆர் , மரு வச்சதும் அவர யாருக்குமே அடையாளம் தெரியாது...அது மேரி இங்க நம்ம அஞ்சான் கையில ஒரு walking stick மற்றும்  மற்றும் வாசன் ஐ கேரில் ஒரு கண்ணாடி மாட்டியதும் அவரை யாருமே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை . சூர்யா டபுள் ஆக்ட் இல்லைன்னு முதலிலேயே தெரிந்துவிடுகிறது. ( இருந்திருந்தா தான் அந்த இத்துப்போன டிரெயிலர் ல " இரு வேடங்களில் தூள் கிளப்பும் " ன்னு ஒரு டேக் லைன் வந்திருக்குமே !!!)


 தன் நண்பனின் சாவுக்கு பழிவாங்க எதிரிகள், துரோகிகள், படம் பாக்க வந்த ஆடியன்ஸ் என்று சகட்டு மேனிக்கு (சமந்தா மேனி அல்ல ) வேட்டை ஆடுகிறார் ராஜு பாய்.

இதில் இவர் நண்பர், துப்பாக்கி படத்து வில்லன், பில்லா 2 வில்லன் டிமிட்ரி ( அந்த பிரபல ஃபேஸ்புக்காரர் இல்லை ), ஹிந்தி கமாண்டோ படத்தின் ஹீரோ வித்யுத் ஜாம்வால் .... இருவரும் படா தோஸ்த் ....அதாவது எப்படிப்பட்ட தோஸ்த் என்றால் பாலிமர் சேனல் டப்பிங் சீரியல் , விஜய் டிவி ஹிந்ஷி டப்பிங் சீரியலில் வரும் non sync வசனம் பேசும் அளவுக்கு தோஸ்த்.

எல்லாரும் ஜுனூன் சீரியல் டப்பிங்போல்  பேசுகிறார்கள்.  தமிழ், ஹிந்தி, தெலுகு என்று ஆல் லாங்குவேஜில் வாயசைக்கிரார்கள். சப் டைட்டில் வரும் என்று பார்த்தால் அந்த எழவும் வரமாட்டேங்குது....ஒருவேள லின்கூ "அனைவரும் ஹிந்தி கற்கவேண்டும் " என்று வலியுறுத்துகிறாரோ என்று டவுட் வருகிறது . ( என்ன பண்ணாலும் தமிழன் படம் பாப்பான்னு ஒரு அதப்பு ). அண்ணன் சீமான் கிட்ட கம்ப்ளைன்ட் சொல்லலாம்னு பாத்தா அவரு வேறு ஒரு "பேக்கேஜ்"ஜில் புலிப்பார்வை , பிஜேபி பார்வை என்று பிசி. 

சரி..டாப்பிக் சேஞ் ஆகிடுச்சி ... ஆங்....அந்த நண்பனை ஒரு மொக்கையான வில்லன் ரவுடி போட்டுத்தள்ளுகிறான் . அந்த நண்பன் சாவுக்கு கூட இருந்து குழி பறித்த துரோகிகளை தொம்சம் செய்கிறார் சூரியா பாய்.... 

அவ்ளோ தான்.

வாவ் மொமண்ட்ஸ் :

டைரக்டர்:
சின்னப்பசங்க எல்லாம் magnet வைத்து மண்ணில் வெளையாடுவாங்க... அதுல கருப்பு கலர்ல ஒரு தூள் வரும்.. அதை எடுத்து பேப்பர் ல போட்டு அடியில காந்தம் வச்சா அது நட்டுகுனு நிக்கும்...அதை சூர்யா hairstyle லாக வைத்து தான் ஒரு magnetic director என்று நிருபித்திருக்கிறார் டைரக்டர்.

 ஹீரோ :



பொன்னுசாமி, அஞ்சப்பர் ஹோட்டலுக்கு எல்லாம் போய் பன்னீர் டிக்கா,சிக்கன் 65 ஆர்டர் செய்தால் அதை எடுத்து திண்ண ஒரு toothpick தருவார்கள் . அதைஎங்கோ ஒரு ஹோட்டலில் கவ்விய ராஜ்ஜுபாய் கடைசிவரை அதை வாயிலேயே வைத்திருக்கும் கதை என்பதால் பட்டையைக் கிளப்புகிறது படம். 

அதுவும் ,
கையில் குச்சி  = தம்பி ரோல் 
வாயில் குச்சி = அண்ணன் ரோல்  

என்று மாறுபட்ட வேடத்தில் கலக்கியிருக்கிறார். சூரியா...கையோ, வாயோ..நான் குச்சியைப் பிடிப்பேன் என்று " குச்சிப்புடி " கலைஞனாக கமலுக்கே சவால் விடுகிறார் சூர்யா.

Yes. Surya is Kamal' s prodigy

ஹீரோயின் :





பொதுவாக சூர்யா தான் ஆ ஊன்னா பனியன் அவுத்து சிக்ஸ் பேக் காட்டுவார். அவருக்கு போட்டியாக சமந்தா படத்தில் சிக்ஸ் பேக் காட்டுகிறார். 

படத்தில் ஹீரோ, ஹீரோயின் அடிக்கடி ஒரே ஸ்டையில் பனியன் போட்டு வந்து  ஆண் பெண் சமத்துவத்தை நிறுவுகிறார்கள். 

மேலும் "ஒரு கண்ஜாடை செய்தாலே " பாடலுக்கு பிகினி உடையில் சமந்தா ( சூர்யாவும் ) சுகுணா சிக்னஸ் க்கு விளம்பரம் செய்கிறார்கள். இது ஒரு நல்ல யுக்தி.

வசனம் / பாடல்கள் :
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கோடி 

அதே டைலர் அதே வாடகை 



வசனம் வேறு , பாடல் வேறு என்று இருந்த கான்செப்டை கட்டுடைப்பு செய்திருக்கிறார் லின்கூ . 

பராசக்தி படத்தில் சிவாஜி " பஞ்சத்தை வரவழைத்தது யார் குற்றம் ?..பஞ்சத்தின் குற்றமா?? இல்லை பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா ?? " என்று பொங்கி எழுவார் சிவாஜி..... அதே tone னில் சூர்யா பொங்கி எழுந்து "ஏக் தோ தீன் சார் ஒத்துக்கோடி ...நா ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கோடி " என்று வசன உச்சரிப்பில் சிவாஜியை விஞ்சுகிறார்.

யுவன் ஒரு சுஃபி / ஹிந்துஸ்தானி மெட்டில் போட்ட பாடல் , லின்கூ வே கொரியோகிராபி ( கொரியா படம் காப்பி இல்லை....இது டான்ஸ் ) செய்தாரோ என டவுட் வரும் பேங் பேங் பேங் பாடல் சுமாராக இருக்கிறது.

காமெடி :

வேட்டைக்காரன் படத்தில் "வேற வேற வேற வேறடா " என்று ஆஸ்கார் நாயகன் விஜய் பேசும் டயலாக்கை " மேல மேல மேல மேல போனீங்களே டா " என்று சூர்யா விஜய் ஸ்டையிலில் பேசும்போது ஆடியன்ஸ் சிரிப்பில் திளைக்கிறார்கள். 


அது போக பஞ்ச் டயலாக்.

* நின்னு நிதானமா மாடியில் போட்ட வடகத்தை தூக்கும் கழுகு, 

* எதிரிகள் கிட்ட கூட துரோகி இருக்ககூடாது. சாரு நிவேதிதா  கிட்டகூட ஜெயமோகன் புக்ஸ் இருக்ககூடாது. 

* நான் எப்படி சாவனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். (சுறா சிடி பாப்பேன் , இல்லாட்டி இந்த படத்தையே  பாப்பேன் )

இப்படிப்பட்ட பஞ்ச்ஸ் வசனம் எல்லாமே வடிவேலு,  சந்தானம் இல்லாத குறையை போக்குகின்றன 

ரெண்டு பேரும் ஏன் எப்பவும் அனஸ்தீஷியா இல்லாமல் பைல்ஸ் ஆப்பரேஷன் செய்யுற மாதிரி கத்துறாங்க ? என்று பக்கத்தில் இருந்த சமந்தா ரசிகர் கேட்டார் 

குறியீடு :

குறியீடு இல்லாத சினிமா எப்படி ??  

" நான் ராஜ்ஜ்ஜு பாய்ன்னு தெரிஞ்ச எவனுமே இப்போ உயிரோட இல்ல " என்று இண்டர்வல் ப்ளாக்கில் சூர்யா சொல்வது படம் பார்த்து செத்துக்கிடக்கும் ஆடியன்ஸ்சை குறிக்கும் ஒரு குறியீடு...


சோசியல் மெசேஜ் :

படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளிய வரும்போது ஒரு லூசு என்பீல்டுல வந்து இன்னொருத்தனோட  வண்டிய இடிச்சிட்டான்...  கன்னாபின்னா என்று சண்ட நடந்தது.... அடிதடி வரும் சூழலில் நான் கிட்ட போயி "பேங் பேங் பேங் " என்று சொன்னதும் சிரிப்பு அடக்கமுடியாமல் ரெண்டு க்ரூப்பும் சிரித்து , சண்டையை மறந்து ஜாலியாய் போனது.

எஸ். அஞ்சான் வயித்துக்கு சிக்கலிக்கா காட்டி, அமைதியை வலியுறுத்தும் ஒரு ஒலக படம். vijay Awards சில் அஞ்சான் பல பரிசுகள் அள்ளும் . அனேகமா நாளை தினத்தந்தியில் "அஞ்சான் 
வசூல் வேட்டை " என்று இன்னும் காமெடி கூட்டுவார்கள் 

overall கதை :

ஆழ்வார் + சுறா + ஜனா + பீமா + 1/2 teaspoon தளபதி + 1/2 teaspoon தலைவா + யார் அந்த திண்டுக்கல் சகாயம் = அஞ்சான் ...

பேங் பேங் பேங் ..

தமிழில் spoof படங்கள்  வருவதில்லை என்ற  குறையை இந்த படம் நிவர்த்திசெய்கிறது . தமிழ் வந்திருக்கும் அருமையான ஒரு gangster spoof அஞ்சான் .

விமர்சனம் -பார்ட் 2 கம்மிங் சூன்.

15 comments:

  1. இதக்கு படத்தையே மறுபடி பாத்துடலாம். :'(

    ReplyDelete
    Replies
    1. ஒரே நதியில் இரண்டுமுறை நனையமுடியாது என்று ஒரு சென் தத்துவம் இருக்கிறது குமார் . ஒரே படத்தை பார்த்து ரெண்டு வாட்டி தற்கொலை செய்யமுடியாது . எனிவே ...நீங்கள் சமந்தா ரசிகராய் இருந்தால் நிச்சயம் என்ஜாய் செய்யலாம்.

      Delete
  2. இந்த ஜாலியான விமர்சனத்துக்காக அந்தப் படத்தை மன்னிக்கலாம்:-)

    ReplyDelete
  3. Super... I read it 5,6 times very funny

    ReplyDelete
  4. Pls release vimarsanam part 2.

    ReplyDelete
  5. Movie vida review super !!! Very funny .

    ReplyDelete
  6. ungal vimarsanam பேங் பேங் பேங் :-)

    ReplyDelete
  7. வரி நடை அருமை

    ReplyDelete
  8. indha baasaa .. baasaa nu solraangale.. atha pathi konjam......

    ReplyDelete
  9. என்னை தற்கொலையில் இருந்து காப்பாத்திய உங்களுக்கு Thanks.

    ReplyDelete